6 ஆண்டுகளாக மன உளைச்சலால் மனோபாலா! கடைசி வரை நிறைவேறாத ஆசை
நடிகர் மனோபாலா கடந்த 3ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், அவர் கடந்த 6 வருடங்களாக மனஉளைச்சலில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மனோபாலா
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மட்டுமின்றி குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராகவும் வலம் வந்த மனோ பாலா சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்சியோ செய்யப்பட்டிருந்தது. பின்பு கல்லீரல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தவர் வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
ஆனால் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய செய்ததோடு, பல முன்னணி நடிகர், நடிகைகளும் நேரில் இரங்கல் தெரிவித்தனர்.
நடிகர் மனோ பாலா பார்ப்பதற்கு பயங்கர ஒல்லியாக இருந்தாலும், பயங்கர சுறுசுறுப்பாகவே செயல்பட்டு ரசிகர்களை கவர்ந்தவர்.
மன உளைச்சலில் மனோபாலா
மனோபாலா தயாரிப்பில், எச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து மனோபாலா பாம்பு சட்டை என்ற திரைப்படத்தையும் தயாரித்த நிலையில், இப்படம் சரியாக ஓடாமல் மனோபாலாவிற்கு நஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பின்பு சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தினை மனோபாலா 2016ம் ஆண்டில் ஆரம்பித்தார்.இப்படம் சில பிரச்சினையால் வெளியாகாமல் இருந்தது. ஆம் சம்பள பிரச்சினை காரணமாக முடியாமல் இருந்த இப்படத்தினை பிரச்சினைகளை முடித்து, படத்தினை வெளியிடவும் அறிவிப்பு வந்துள்ளது.
ஆனால் தற்போது வரை அப்படம் வெளிவராமல் கிடப்பில் இருந்துள்ள நிலையில், இதனை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி செய்து, மன உளைச்சலில் இருந்துள்ளார்.
ஒருவேளை அரவிந்த்சாமி மட்டும் பிரச்சனை செய்யாமல் டப்பிங் பேசிக் கொடுத்திருந்தால் இப்படம் நிச்சயம் வெளிவந்திருக்கும் என்று கூறப்படுகின்றது.