உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை : மஞ்சிமா மோகன் ஓபன் டாக்!
நடிகை மஞ்சிமா மோகன் உடல் எடையை குறைப்பதன் அவசியம் மற்றும் அறுவை சிகிச்சை பற்றி சமீபத்திய போட்டியொன்றில் பேசிய விடயங்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
நடிகை மஞ்சிமா மோகன்
சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் மஞ்சிமா மோகன். அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருந்தாலும் ஒருகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
அதனை தொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்கனர்.அதன் போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
சமீபத்தில் சுழல் 2 என்ற ஹாட்ஸ்டார் வெப் தொடரில் நடித்தார், அதில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
திருமணத்திற்கு முன்னரே மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகரித்து காணப்படடார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில்,தற்போது இது குறித்து பேட்டியொன்றில் வெளிப்படையாக பேசியிருக்கின்றார்.
ஓபன் டாக்
அவர் குறிப்பிடுகையில், “எனக்கு பிசிஓடி இருந்தது. கொஞ்சம் எடை கூடியபோது, நான் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்தேன், பிசிஓடியைக் குறைக்க வேண்டியிருந்தது.
பிசிஓடியைக் குறைக்க வேண்டியிருந்தது. எப்படியாவது எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தேன், அறுவை சிகிச்சை மூலம் எடையைக் குறைக்க மருத்துவர்களைச் சந்தித்திருக்கிறேன்.
உடல் எடைதான் மிகப்பெரிய பிரச்சினை என்பது போல எல்லோரும் பேசுகிறார்கள். நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சினிமா என் வேலை மட்டுமே. எடையைக் குறைத்து வேறொரு தோற்றத்திற்கு வந்தால், ஒருவேளை இன்னும் சில படங்கள் கிடைக்கலாம்.
அதன் பிறகு யாரும் நாம் எப்படி இருக்கிறோம் என்று விசாரிக்க மாட்டார்கள். வேலை சம்பந்தமில்லாத வேறு இலக்குகள் எனக்கு உள்ளன” என்று மஞ்சிமா மோகன் குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |