96 பட குட்டி ஜானுவா இது? இணையத்தை ஆக்கிரமிக்கும் ஹோம்லி லுக் புகைப்படங்கள்
96 திரைப்பட புகழ் கெளரி கிஷன் அழகிய சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் குடும்ப பாங்காக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை கௌரி கிஷன்
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த 96 திரைப்படத்தின் மூலம் கிராமத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கௌரி கிஷன்.
இவர் 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே இந்த படத்தில் நக்கும் வாய்ப்பை பெற்றார். படத்தில் அவரது கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
அதனை தொடர்ந்து 96 இன் தெலுங்கு ரீமேக்கான ஜானுவிலும் ஜானுவாக நடித்தார், இதனால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகும் வாய்ப்பு அமைந்தது.
அதனையடுத்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவியாகவும், மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷுடன் கர்ணன் படத்திலும் நடித்தார்.
சிறந்த கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளடத்தையே உருவாக்கிக்கொண்ட இவர், அண்மை காலமாக கிளாமரில் வெளுத்து வாங்கி வருகின்றார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் கௌரி கிஷன் ஹோம்லி லுக்கில் கொள்ளை அழகுடன் தற்போது, வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |