திருமணத்திற்கு முன் காதலனுடன் ரொமான்ஸ்! புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை
பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் திருமணம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள நிலையில், இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக், கடல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து ரங்கூன், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்தார், தேவராட்டம் படத்தின் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் மீது காதல் வயப்பட்டார் கௌதம் கார்த்திக்.
இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார் கௌதம், இரு நாட்கள் கழித்து மஞ்சிமாவும் ஓகே சொல்ல, தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் நாளை மறுதினம் (நவம்பர் 28ம் தேதி) திருமணம் நடைபெறவுள்ளது.
நெருங்கிய சொந்த பந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளதாக இருவரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மஞ்சிமா மோகன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாகி வருகிறது.