காதலை உறுதிப்படுத்திய கெளதம் கார்த்தி- மஞ்சிமா மோகன்: விரைவில் திருமணம்?
தமிழ் சினிமாவில், சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா மோகன்.
அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்தார்.
தேவராட்டம் படத்தில் நடித்தபோது கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல் பரவியது.
இதையடுத்து, இவர்களின் திருமணமும் விரைவில் நடைப்பெறும் என கூறப்பட்ட நிலையில், கடந்த நாளில் கெளதம் கார்த்தி பிறந்த நாளுக்கு நடிகை மஞ்சிமா
மோகன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் “my favorite human” என காதல் குறியீட்டை பயன்படுத்த அதற்கு கெளதம் கார்த்தியும் “my favorite human" பயன்படுத்த இதைக்கண்ட நெட்டிசன்கள் இவர்களின் காதல் உண்மைதான் என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
Thank you MY favorite human ❤️ https://t.co/dPvQL2f60G
— Gautham Karthik (@Gautham_Karthik) September 12, 2022
