நடிகர் மணிவண்ணனின் மகனும் நடிகரா? எத்தனை படங்கள் நடித்திருக்கிறார் பாருங்க
நடிகர் மணிவண்ணன் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்பட்டு வருகின்றது.
நடிகர் மணிவண்ணன்
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன்.
இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.
நடிகர் சத்யராஜும், மணிவண்ணனும் கல்லூரி நண்பர்கள். சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.
1983ஆம் ஆண்டு வெளியான ஜோதி என்ற படம்தான் மணிவண்ணன் இயக்கிய முதல் திரைப்படம். இவர் இயக்கிய அமைதிப்படை, ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி என பல படங்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
நடிகர் மணிவண்ணனுக்கு மனைவி பெயர் செங்கமலம். இவருக்கு ரகுவரண்ணன் மற்றும் ஜோதி என இரு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
மணிவண்ணனின் மகனான ரகுவரண்ணன் தமிழில் வெளிவந்த கோரிப்பாளையம், தொடக்கம், நகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மணிவண்ணன் தனது மகள் மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |