மனிஷா கொய்ராலா வீட்டில் விஷேசம்.. நண்பர்களுடன் பார்ட்டி ஏற்பாடு
நடிகை மனிஷா கொய்ராலா வீட்டில் நேற்றைய தினம் நடந்த விஷேச புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மனிஷா கொய்ராலா
90 காலகட்டங்களில் இந்திய அளவில் பிரபலமாக இருந்தவர் நடிகை தான் மனிஷா கொய்ராலா.
இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பிரபலமானார். ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்த மனிஷா கடந்த 1995-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்‘ திரைப்படத்தின் மூலம் கோலிவுட் அறிமுகமானார்.
முதல் படமே சூப்பர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து இந்தியன், ஆளவந்தான், முதல்வன், பாபா என கமல், ரஜினி வரை ஜோடி போட்டு நடித்திருக்கிறார்.
ஒரு கட்டத்தில் மனிஷாவின் சினிமா வாழ்க்கையில் தோல்விகள் வர ஆரம்பித்தது. அதே சமயம் மது பழக்கத்திற்கு அடிமையானார். அத்துடன் கேன்சர் நோயால் அவஸ்தைபட்டு வந்தார்.
வீட்டில் விஷேசம்
நீண்ட நாட்களுக்கு பின்னர் நோயில் இருந்து மீண்டு வந்த மனிஷா தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அத்துடன் போட்டோஷூட்களிலும் ஆர்வமாக இருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிராட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து மனிஷாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அவருடைய 55 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் எடுத்து கொண்ட புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் வாழ்த்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |