சென்னையில் அபார்ட்மென்ட் வாங்கிய விஜே மணிமேகலை... வைரலாகும் கிரஹப்பிரவேச புகைப்படங்கள்
விஜே மணிமேகலை ஆசைப்பட்ட மாதிரி சென்னையில் ஒரு வீடு வாங்கி விட்டேன் என்று எமோஷனலாக பதிவிட்டு வெளியிட்டுள்ள புதிய வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
விஜே மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை.சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார்.
சில மாதங்களுகடகு முன்னர் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சயில் பிரியங்கா உடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது இணையத்தில் புயலை கிளப்பியது.
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினாலும் நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றை மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது மணிமேகலை - ஹுசைன் தம்பதியினர் சென்னையில் ஒரு பிரிமியம் அபார்ட்மெண்ட் வாங்கி இருக்கின்றனர்.
புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ,திருமணம் ஆன பின்னர் மாதம் 10,000 வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம்.
ஆனால் இன்று சென்னையில் பிரைம் லொகேஷனில் ஒரு பிரீமியம் வீடு வாங்கி இருப்பதன் மூலம் எங்களது மிகப்பெரிய கனவு நனவாகிவிட்டது.என நெகிழ்சியாக பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வாழ்த்துக்களை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |