புதிய தோற்றத்தில் அசத்தும் நடிகை தமன்னா... லைக்குகளை அள்ளும் புகைப்படங்கள்
நடிகை தமன்னா ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தமன்னா. இதன் பின்னர் தமிழில் நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இன்று வரை இருந்து வருகின்றது.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.
அவர் நடிப்பில் வெளிவந்த லஸ்ட் ஸ்டோரீஸில் படு கிளாமராக களமிறங்கியிருந்தார். ஜெயிலர் படத்தில் காவலா பாடலில் நடனம் ஆடிய பின்னர் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
சமீபத்தில், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் இவர்தான் பேய் கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன் அதில் இடம் பெற்ற அச்சோ அச்சோ... பாடலுக்கு செம ஹொட்டாக நடனமாடி இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது சினிமாவில் மாத்திரமன்றி, சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் வித்தியாசமான உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |