கதையோடு கதையாக ஷாருக்கானை பங்கம் செய்த மணிரத்னம்.. திகைத்து போன அரங்கம்
கதையோடு கதையாக ஷாருக்கானை கலாய்க்கும் வகையில் மணிரத்னம் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
விருது விழா
சமீபத்தில் இந்தியன் சார்பில் ஆஃப் தி இயர் 2023 என்ற விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குநர்களில் ஒருவராக மணிரத்னம் பார்க்கப்படுகிறார்.
இவர் பொன்னியின் செல்வன் பாகம் 1 பாகம் 2 என இரண்டு படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிட்டிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தக் லைஃப் படத்தை இயக்க ரெடியாகிவிட்டார்.
கலாய்த்த ஷாருக்கான்- கடுப்பான மணிரத்னம்
இந்நிலையில், மணிரத்தினத்தின் இந்தியன் ஆஃப் தி இயர் 2023 என்ற விருது பிரபல தொலைக்காட்சி சார்பில் வழங்கப்பட்டது.
இதன்போது, மேடையில் பேசிக் கொண்ருந்த ஷாருக்கான் மணிரத்னத்தை பார்த்து, “மீண்டும் எப்போது இணையலாம். அத்துடன் உயிரே படத்தில் தையா தையா பாடலில் ரயிலின் மீது டான்ஸ் ஆடியதை சுட்டிக் காட்டினார்.
“இந்த முறை விமானத்தின் மேலே ஏறி டான்ஸ் ஆட வேண்டிய தான்..” என்றார். இதை கேட்ட மணிரத்னம், “சீக்கிரமே பிளைட் வாங்கிவிடுகிறேன்.” என்றார்.
மணிரட்னம் பேசியதை கேட்ட ஷாருக்கான், "இப்போது எனது படங்கள் போற வேகத்துக்கு பிளைட் வாங்குறது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது.
என்னுடைய படங்கள் 2500 கோடி வசூல் செல்கிறது. இதை வைத்தே வாங்கி விடலாம்.” என பதில் கொடுத்தார். ஷாருக்கானின் இந்த பதில் அரங்கத்தை அதிர்ச்சியாக்கியுள்ளது.
இதனை அடுத்து மணிரத்னம், “ நானே சொந்தமாக பிளைட் வாங்கிட்டு வருகிறேன். அதன்பின்னர் கண்டிப்பாக இணையலாம்” என கலாய்க்கும் வகையில் பேசியுள்ளார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. ஆனால் ஷாருக்கான் இப்படி பேசியது தமிழ் சினிமாவை கொச்சைப்படுத்தும் வகையில் இருந்தது என கோலிவுட் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |