செலரி ஜூஸ் குடித்தால் இந்த நோய் எட்டிக் கூட பார்க்காதாம்: கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் பச்சை இலைக் காய்கறிகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அந்த வகையில் பச்சை இலைக் காய்கறியான செலரியை சாலட் செய்து சாப்பிடுவதை விட ஜீஸ் செய்து குடிப்பது சிறந்தது.
இதன்படி, செலரியில் வைட்டமின்கள் கே மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்களை வழங்குகின்றது.
இது போன்று செலரி ஜீஸை குடிப்பதால் வேறு என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
செலரி ஜீஸ்
1. செலரி சாற்றில் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகின்றது.
2. செலரி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளது. இதனால் செலரி உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றது.
3. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. அத்துடன் செலரியில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கின்றது.
4. செரிமானம் முடிந்த பின்னர் வயிற்றிலுள்ள நச்சுக்களை செலரி ஜுஸ் வெளியேற்றுகின்றது.
5. அதிகப்படியான கலோரிகள் இல்லாத காரணத்தினால் டயட் பிளானில் இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம். இது எடையை கட்டுக்குள் வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |