மணி சந்திராவின் முன்னாள் காதலி யார் தெரியுமா? வெளியான பல உண்மைகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மணி சந்திராவின் முன்னாள் காதலி அளித்துள்ள தகவல் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 7ல் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 3 பேர் வெளியேறிய நிலையில் மீதமுள்ள 15 போட்டியாளர்கள் கடுமையாக விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியாளர்களின் மணி சந்திரா மற்றும் ரவீனாவும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் காட்டி வரும் நெருக்கத்தை பார்த்து காதலர்களா என்ற கேள்வி எழுந்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் முன்பே ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்ததுடன், நெருக்கமாக புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் விதிமுறையை மீறி இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், இவர்கள் மீதான சந்தேகம் அதிகரித்து வருகின்றது.
அதிலும் இன்றைய தினத்தில் இவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதம் இவர்கள் உண்மையிலேயே காதலர்கள் என்பது தெளிவாகவே இருந்து வருகின்றது.
மணியின் முன்னாள் காதலி
இந்நிலையில் மணியின் முன்னாள் காதலி பெலினா என்ற பெண் பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் நன்றாக பழகிக் கொண்டிருந்த நிலையில், இடையில் ரவீனா வந்த பின்பு இவர்களிடையே பிரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பேசாமல் பிரிந்தும் விட்டார்களாம்.
அது மட்டுமில்லாமல் ரவீனா வந்த பின்பு தான் மணியின் நடவடிக்கையும் மாறியுள்ளது என்று பெலினா கூறியுள்ளார்.
மணி கணக்கில் போன் செய்து பேசிய மணி, பேசுவதை நிறுத்தியுள்ளராம். பின்பு பெலினாவிற்கு நிச்சயதார்த்தம் நடக்கும் பொழுது தான் மணி போன் செய்து பேசினாராம்.
ஒரு கட்டத்தில் ரவீனா உடன் நெருக்கம் அதிகமாக இருந்ததால், அவரவர் வேலையை பார்த்துக்கொண்டு விலகிவிடலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக பெலினா கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |