மாம்பழத்தை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைப்பது ஏன்?
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் என்று கூறுவதற்கான காரணத்தை தற்போது தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
கோடை காலம் ஆரம்பித்துவிட்டாலே ஒருபுறம் வெயிலும், மற்றொரு புறம மாம்பழ சீசனும் தான் ஆரம்பமாகும். முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழம் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் பழமாக இருக்கின்றது.
மாம்பழம் மட்டுமல்ல, எந்த பழங்களை எடுத்துக்கொண்டாலும் அவற்றை சுத்தமான நீரில் கழுவி விட்டு பின்னர் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆனால், மாம்பழத்தை பொறுத்தவரை ஒரு சிலர் அதை நீரில் சில மணி நேரங்கள் ஊற வைத்த பின்னர் சாப்பிட வேண்டும் என கூறும் நிலையில் இதற்கான காரணத்தை அறிந்து கொள்வோம்.
இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளும் நிறைந்துள்ளதுடன், நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது. கண் பார்வை திறனை அதிகரிக்க, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க என, பல்வேறு நன்மைகள் மாமபழத்தில் நிறைந்திருக்கின்றன.
அது மட்டுமன்றி, பீட்டா கெரோட்டீன் சத்துகளும் உள்ளன. இவை, உடலில் இருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்புகளை சரிப்படுத்த உதவும். இதனால், நுரையீரல், இருதயம் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும். இவை, மாம்பழத்தில் இருக்கும் வைட்டமின் கே சத்தினால் நிகழ்கின்றன.
தண்ணீரில் ஏன் ஊற வைக்க வேண்டும்?
மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நன்மை கிடைக்கும் என்று பலரும் நினைக்கும் நிலையில், மாம்பழத்தினை கழுவி சாப்பிட்டாலும், தண்ணீரில் ஊற வைத்து பின்பு சாப்பிட்டாலும் அதில் உள்ள நன்மை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
சில மாமபழங்களின் தோல்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இதனை இலகுப்படுத்துவதற்காக தண்ணீரில் சிலர் ஊற வைப்பார்கள்.
மேலும் மாம்பழம் அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சில ராசாயணங்களை பயன்படுத்தும் நிலையில், இதன் பாதிப்பு நமக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக தண்ணீரில் ஊற வைத்து மாம்பழத்தை பயன்படுத்துகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |