இட்லி,தோசைக்கு காரசாரமான மாங்காய் சம்பார் செய்ய தெரியுமா? ஈஸியான ரெசிபி
பொதுவாக சாம்பார் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
காலையுணவிற்கு இட்லியுடன் சாம்பார் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.
அந்தவகையில் நாம் நிறைய வகைகளில் சாம்பார் சாப்பிட்டிருப்போம்.
ஆனால் தற்போது நாம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையில் சாம்பார் எப்படி வைப்பது என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தித்திப்பும் புளிப்புமான சிறிய மாம்பழங்கள் - 2,
துவரம்பருப்பு - 3 கரண்டி,
அரிசி மாவு - அரை டீஸ்பூன்,
புளி - சிறு எலுமிச்சை அளவு,
பச்சை மிளகாய் - ஒன்று,
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
கொத்தமல்லி - சிறிதளவு,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - ஒன்று,
உப்பு - தேவையான அளவு.
தயாரிப்பு முறை
முதலில் துவரம்பருப்பை எடுத்து சுமார் 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அதனை நன்றாக மசித்து கொள்ளவும்.
பின்னர் கொத்தமல்லி, மாங்காய் , ப.மிளகாய் என்பவற்றை கழுவி விட்டு நறுக்கவும்.
இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும் அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து உப்பு, மஞ்சள், பெருங்காயத்தூளுடன் கலந்து வேக வைக்கவும்.
காய்கறிகள் வெந்ததும் அதில் புளி தண்ணீர் மற்றும் சாம்பார் பொடி சேர்க்கவும்.
பொடியின் பச்சை வாசனை சென்றவுடன் அரிசி மா கலந்து வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றவும்.
மற்றுமொரு கடாயை அடுப்பில் வைத்து தாளித்து கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான சம்பார் தயார்!