Mango Jam: மாம்பழத்தில் ஜாம் செய்து சாப்பிட்டதுண்டா
முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் உடலுக்கு தேவையான எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
இதை அடிக்கடி சாப்பிட்டு வரும் போது தீங்கு தரும் நுண்ணுயிரிகளை உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.
குடலில் உள்ள பித்தநீரை வெளியேற்றுவதுடன் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும்.
முதுமையை தடுத்து, சளி தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கும், நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதுடன் செரிமான சக்தியை அதிகரிக்கும்.
இவ்வாறான பல நன்மைகளை கொண்ட மாம்பழத்தைக் கொண்டு பல்வேறு ரெசிபிக்களைச் செய்யலாம், இந்த பதிவில் மாம்பழத்தில் ஜாம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பழுத்த மாம்பழம் - 1
மாம்பழ எசன்ஸ் - சில துளிகள்
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை பழம் - 1
இஞ்சி துருவல் - 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் மாம்பழத்தை கழுவி தோலை எடுத்துவிட்டு, சதையை மட்டும் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அடி கனமான கடாயை வைத்து அதில் மாம்பழத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
அதன்பின்னர் அதில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு அதில் சர்க்கரை சேர்த்து 25 நிமிடங்கள் வரையில் தீயில் கைவிடாமல் கிளறிவிட வேண்டும்.
நல்ல திக்கான பதம் வரும்போது மாம்பழ எசன்ஸ், இஞ்சி துருவல் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறிவிட வேண்டும்.
இஞ்சியின் பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும். ஜாமில் சிறிதளவு எடுத்து தட்டில் ஊற்றி, அது ஓடாமல் நெகிழ இருக்கும்போது அடுப்பை அணைத்து விடவும்.
நன்றாக ஆறியதன் பின்னர் கண்ணாடி டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். சூப்பரான மாம்பழ ஜாம் தயார்.