9 திருமணம்... முதல் குழந்தையை யார் பெறுவது? சாமர்த்தியமாக காய் நகர்த்திய கணவர்
தனது ஒன்பது மனைவிமார்களில் யார் முதல் கர்ப்பமாக இருக்க வேண்டும் என்பதில் நான் கண்ணாக இருக்கிறேன் என பிரேசிலை சேர்ந்த நபர் ஒருவர் கூறிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
9 திருமணங்கள்
பிரேசில் சாவ் பாலோவைச் சேர்ந்த “ உர்சோ” (37) (Arthur Urso) என்பவர் சுமார் திருமணம் செய்துள்ளார்.
இவரின் மனைவிமார்களும் ஒரே வீட்டில் தான் இருக்கிறார்கள். மேலும் 21 முதல் 51 வயது வரையில் சுமார் 6 மனைவிமார்கள் இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து குறித்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் 3 மனைவிமார் விவாகரத்து பெற்று சென்றுள்ள நிலையில் தற்போது 6 மனைவிமார் மட்டுமே இருந்து வருகிறார்கள்.
வாடகை தாய் தான் தீர்வு
இந்த நிலையில் இவருடன் வாழும் மனைவிமார்களுக்கிடையே ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் யார் ஆர்தரின் முதல் குழந்தையை பெற்றுக் கொள்வது என குழப்பமடைந்துள்ளார்கள்.
இதனால் முதல் குழந்தையை வாடகை தாயை வைத்து பெற்று கொள்ளலாம் என தீர்மானித்துள்ளார்கள். குறித்த செயற்பாட்டிற்காக 41 ஆயிரம் டாலர்ஸ் செலவிட போகிறார்களாம்.
இது இந்திய மதிப்பில் 33 லட்சத்து 58 ஆயிரத்து 617 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள் “இங்கு ஒரு மனைவியின் தொல்லையே தாங்க முடியாமல் இருக்கிறது. எப்படி 6 மனைவிகளை சமாளிக்கிறீர்கள் ” என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.