கடலில் குதித்த இளைஞர்... நொடிப்பொழுதில் ஆண்குறியை கடித்து குதறிய சுறாக்கள்! பதறவைத்த சம்பவம்
கடலுக்கு குளிக்க சென்ற இளைஞர் ஒருவரை சுறா ஒன்று அந்தரங்க பகுதியை தாக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேசிலை சேர்ந்த ஜோஸ் எர்னெஸ்டர் டா சில்வா 18 வயதுடைய இளைஞர் ஒருவர், பிரேசிலின் வடகிழக்கு கடற்கரையில் உள்ள 'பைடட் பீச்' என்ற பிரபலமான கடற்கரைப் பகுதிக்கு பெற்றோர்களுக்குத் தெரியாமல் நீந்தச் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சுறாக்கள் அதிகமாக இருக்கும் பகுதிக்கு ஜோஸ் சென்றுள்ளார். இதைக்கண்ட உயிர்காப்பாளர்கள் அவர்களைப் பார்த்தபோது, உடனடியாகத் திரும்பும்படி கூச்சலிட்டுள்ளனர்.
ஆனால் ஜோஸ் திரும்புவதற்கு முன், சுறா தாக்கியது. உடனே உயிர்காப்பாளர்கள் காப்பாற்ற கடலில் குதித்து, மீட்டனர். ஆனாலும், அந்தரங்க பகுதியை தாக்கிய சுறா, அவரின் ஆண்குறியை கடித்துக் குதறிவிட்டது.
இதன்பின்னர், சிறிது முயற்ச்சிக்கு பிறகு, அவர் கரைக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவரது அந்தரங்க பகுதியில் இருந்து தொடர்ந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார். இச்சமபவத்தினால் அவரது தாய் மிகுந்த வேதனையில் கதறியுள்ளார்.