சில்லி சிக்கனுக்கு சண்டை: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நபர் மருத்துவமனையில்
உலகத்தில் எது எதற்கோ சண்டையிடும் நம் மக்கள் கடைசியில் இவற்றுக்கெல்லாம் சண்டை போடுவார்களா என கேட்கும் அளவுக்கு நம் மக்கள் இறங்கி விட்டனர்.
அப்படி ஒரு சம்பவம் தான் சேலத்தில் நடந்துள்ளது. கருங்கல்பட்டி எனுமிடத்தில் தாவூத் கான் என்பவர் நடாத்தி வரும் சிக்கன் கடையொன்றில், சதீஷ் குமார் என்பவர் பணியாற்றுகின்றார்.
இந்த சதீஷ் குமாரிடம் அதே பகுதியைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் கடந்த மூன்று நாட்களாக சில்லி சிக்கன் இலவசமாக தருமாறு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சதீஷ் குமார் அதை தொடர்ந்து மறுத்துவர, கோபமுற்ற முரளிதரன் என்பவர், நேற்றிரவு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த சதீஷ் குமார் சேலம் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள முரளிதரனை பொலிஸார் தேடி வருகின்றனர்.