கடனுக்கு சில்லி சிக்கன் கேட்டதால் தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்! பரபரப்பு சம்பவம்
தமிழ் நாடு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மல்லாபுரம் கிராமத்தில் வசிப்பவர் கணேசன். இவருடைய மகன் அண்ணாதுரை திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் சோம்பட்டி கிராமத்தில் உள்ள சரஸ்வதி என்பவரது கோழிக்கடையில் சில்லி சிக்கன் தயாரித்து வரும் தொழிலாளியாக பணி செய்து வந்தார்.
இதனையடுத்து, அண்ணாதுரை கடையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கு சோளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி சுந்தரம் வந்து அவரிடம் சில்லி சிக்கனை கடனாக கேட்டுள்ளார்.
ஆனால் அண்ணாதுரை சில்லி சிக்கனை சுந்தரத்திற்கு கடன் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு சுந்தரம் கல்லா பெட்டியில் இருந்த பணத்தை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்து, அண்ணாதுரை தடுத்ததால் கோபமடைந்த சுந்தரம் தனது பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் சரஸ்வதி, சுந்தரத்தை தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கியுள்ளார்.
இதனால், கத்திக் குத்துபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணாதுரையை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக அண்ணாதுரையை சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அண்ணாதுரை பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாத்துரையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கட்டிட தொழிலாளியான சுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.