திருமணமான 2 நாளில் கணவனை அந்த இடத்தில் கத்தியால் குத்திய புது மனைவி: என்ன காரணம்?
எதாவது அசம்பாவித சம்பவங்கள் நாளுக்கு நாள் நடந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அதாவது பீகார் மாநிலத்தில் சீதாமரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சூர்யபூஷண் குமார்.
இவருக்கும் நேஹா குமாரி என்ற பெண்ணுக்கும் இடையில் காதல் இருந்துள்ளது.
இவ்வாறு இருக்க, நேஹா சூர்யபூஷணை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேஹா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, தனது வீட்டுக்கும் தெரியாமல் பாட்னாவுக்கு வந்த சூர்யபூஷண், தனது காதலியான நேஹாவை கடந்த ஜூன் 05ஆம் திகதி பதிவுத் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்தின் பின்னர் இருவரும் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் திருமணமாகி ஒரு நாளை கடந்திருந்த நிலையில், நேஹாவை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதத்தில் செய்தியொன்றை சூர்யபூஷண் தெரிவித்துள்ளார்.
அது என்னவெனில், தனது வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்த்துள்ளதாகவும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள் என்றும் என்ன செய்வது என சூர்யபூஷண் தனது மனைவியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவரது மனைவி, வீட்டாரிடம் பேசி திருமண ஏற்பாடுகளை நிறுத்துமாறு கூறியள்ளார். ஆனால், சூர்யபூஷண் பிடிகொடுக்காதல் பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒன்று நான் உன்னை கொன்றுவிடுவேன் இல்லது தற்கொலை செய்துகொள்வேன் என நேஹா சூர்யபூஷணை மிரட்டியுள்ளார்.
இந்த சண்டை தீவிரமான நிலையில், நேஹா கத்தியை எடுத்து தனது கணவரின் அந்தரங்க உறுப்பில் குத்தியுள்ளார்.
கத்தி குத்துப்பட்ட சூர்யபூஷண் ஹோட்டல் ஊழியரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேஹாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.