மூன்று நாட்களுக்கு பின்னர் உயிர் பிழைத்த நபர் - மீட்கப்படும் காட்சிகள்
Kern நதியில் மூன்று நாட்களாக நீர்வீழ்ச்சிக்குப் பின்னால் சிக்கிய நபர் ஒருவரை TCSO மீட்புக் குழு காப்பாற்றிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
வைரல் காணொளி
ஞாயிற்றுக்கிழமை மாலை கடந்த 10ம் திகதி கெர்ன் நதியின் வடக்கு ஃபோர்க்கிற்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியின் நபர் ஒருவர் காணாமல் போயிருக்கிறார் என 11ம் திகதி அன்று, துலாரே கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் அவசர சேவைகள் பிரிவில் புகார் ஒன்று வந்துள்ளது.
இதனை தொடர்ந்து இந்த நபரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, இது பற்றி விசாரித்ததில் 46 வயதான Ryan Wardwell நீர்வீழ்ச்சிகளை ராப் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக அந்த இடத்திற்கு சென்றவர் ஞாயிற்றுக்கிழமை ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சிறப்பு தொழில்நுட்பம் கொண்ட கமெராக்கள் பொருத்தப்பட்ட விமானங்களைப் பயன்படுத்தி TCSO பிரிவுகள் அந்தப் பகுதியில் விரைவான தேடலைத் தொடங்கின.
அதாவது 12ம் திகதி, TCSO ஸ்விஃப்ட்வாட்டர்-டைவ் மீட்புக் குழு (SDRT) மற்றும் தேடல் மற்றும் மீட்பு (SAR) குழுக்கள் தேடலைத் தொடங்க அந்தப் பகுதிக்குச் சென்றன.
தேடலின் போது, ஒரு பெரிய நீர்வீழ்ச்சியின் பின்னால் சோதனை செய்ய ஒரு ட்ரோன் பயன்படுத்தப்பட்டது. அங்கு Ryan Wardwell உயிருடன் பேசும் தன்மையுடன் காணப்பட்டார்.
மீட்பு நடவடிக்கைக்கு உதவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு அந்த நபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன, சிறிய காயங்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டது, மற்றும் நீரிழப்புக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இதுபோன்ற நீர்வீழ்ச்சி பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என TCSO குழு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |