அபராதத்தால் வந்த வினை! கூரையில் பார்க்கிங்.. யாரும் எதிர்பார்க்காத பதிலடியை கொடுத்த நபர்
மொட்டை மாடியில் கார் பார்க்கிங் அமைத்த நபரொருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாறுப்பட்ட சிந்தனைகள்
தைவான் நாட்டில் குடியிருப்பின் வாசலில் தன்னுடைய காரை பார்க் செய்ததற்காக நபர் ஒருவருக்கு அந்நாட்டு அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது.
இந்த விடயம் அந்த நபரை ஆழமாக பாதித்த காரணத்தினால் குறித்த நபர் தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் கார் பார்க்கிங் அமைத்து காரை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார். இந்த விடயம் அப்பகுதியிலுள்ள சிலரின் சிந்தனை துண்டியுள்ளது.
மேலும் இவ்வாறு ஏன் செய்தீர்கள் இதற்கு என்ன காரணம்? என குறித்த நபரிடம் வினவிப்போது,“ என்னுடைய காரை வீட்டு வாசலில் நிறுத்தியதற்கு அபராதம் கேட்டார்கள். அந்த விரக்தியில் தான் இப்படி செய்து விட்டேன்.” என பதிலளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிரேனை வாடகைக்கு எடுத்து அதன்மூலமாக 2 வேன்களையும் மொட்டை மாடியில் நிறுத்தியதாகவும் அவர் கூறி உள்ளார்.
வாகனங்களை கீழே இறக்காமல் போனதற்கான காரணம் என்ன?
குறித்த விடயம் அங்கிருந்த அதிகாரிகளின் காதிற்கு சென்றதால் அவர்கள் வாகனங்களை கீழே இறக்குமாறு கூறியுள்ளார்கள்.
இந்த கட்டிடம் ஸ்டீல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. எனவே 2 வாகனங்களின் எடையை தாங்கும் என்பதால் இது குறித்த யாரும் கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ கோபத்தில் இப்படியொரு முடிவா?” என அதிர்ச்சியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.