வெள்ளம் வந்தால் ”மிதக்கும் வீடு” - அடடே இது கூட சூப்பரா இருக்கே
மழை, வெள்ளம் வந்தால் 10 அடி உயரத்துக்கு மேலே எழும்பும் வகையில் வீடை வடிவமைத்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த பொறியியலாளரான கோபாலகிருஷ்ணன்.
கடந்த சில வருடங்களாகவே வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறது கடவுளின் தேசமான “கேரளா”.
இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன், ரம்மியமாக காட்சியளிக்கும் கேரளாவுக்கு சாபமாகிறது இந்த பெரு வெள்ளம்.
காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், கார்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் வெளியாகி அதிரவைக்கின்றன.
இந்நிலையில் Vazhappilly நகரை சேர்ந்த கோபாலாகிருஷ்ணன் என்ற பொறியாளர் மேலெழும்பும் வீடை கட்ட முடிவெடுத்தார்.
இதற்கான முயற்சிகள் எடுத்த போதும், கோபாலகிருஷ்ணனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது, எனினும் சோர்ந்து போகாமல் அவருடைய சொந்த பணத்தில் 1200 சதுர அ டியில் மிதக்கும் வீட்டை கட்டி முடித்தார்.
இந்த வீடு வெள்ளம் வந்தால் சுமார் 10 அடி மேலே எழும்புமாம், வீட்டின் அடிதளத்திற்கு கீழுள்ள நான்கு மூலைகளிலும் 4 பிஸ்டன்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், அடித்தளத்தில் கனமான ஜிஐ பைப்புகள் கொண்டு தரைத்தளத்திற்கான அரண் அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு கீழ் காற்றடைக்கப்பட்ட பேரல்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது, செங்கல் மணம் ஏதுமின்றி ஜிஐ பைப்புகள், மறுசுழற்சி செய்து வலுவூட்டப்பட்ட மரங்கள், பிளாஸ்டர் ஆப் பேரிஸ் கொண்டு கட்டுமானம் பூர்த்தியாக்கப்பட்டது.
கார் பார்க்கிங், கழிவறை தொட்டி என வெள்ளம் வந்தால் அனைத்தும் மேலெழும்பும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.
முதலில் எதிர்ப்புகள் இருந்தாலும், வீட்டை கட்டி முடித்தபின்னர் அனைவரும் தன்னை பாராட்டுவதாக நெகிழ்கிறார் கோபாலகிருஷ்ணன்.
மேலும் இந்த வீட்டை கட்டி முடிக்க நான்கு மாதங்கள் ஆனதாகவும், குறைவான தொழிலாளர்களை கொண்டு வீடு கட்டி முடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தண்ணீர் அதிகம் தேங்கும் தாழ்வான பகுதிகளுக்கு ஏற்றபடி அதிகளவான பிஸ்டன்களை கொண்ட வீட்டை வடிமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.