யாஷிகா கார் விபத்திற்கு பாலாஜி காரணமா? வெளியான காணொளியால் பரபரப்பு
நடிகை யாஷிகா விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில், கடந்த 2019ம் அண்டு நடந்த யாஷிகாவின் விபத்து குறித்து பிக்பாஸ் பாலாஜி காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவரும் நிலையில், அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதுடன், 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 2019ல் நடந்த யாஷிகாவின் விபத்து விவகாரம் குறித்து பிக்பாஸ் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, "கடந்த 2019 அக்டோபர் 6 ஆம் தேதி நள்ளிரவு 2 மணி அளவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹாரிங்டன் சாலையில், கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அங்கு, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பரத் என்பவர் மீது மோதி படுகாயமடைந்தார்.
அந்த காரில் நடிகை யாஷிகா ஆனந்த் பயணம் செய்ததாகவும் விபத்து நடத்த உடனே அவர் வேறு காரில் ஏறி சென்றுவிட்டார் என்றும் அன்றைய செய்திகள் வெளியாகியது.
அதற்கு மறுப்பு தெரிவித்த யாஷிகா, அது தன்னுடைய கார் இல்லை என்றும், என்னுடைய நண்பர்கள் செய்த விபத்து செய்தியை கேட்டு தான் அங்கே சென்றதாவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஜோ மைக்கேல், குறித்த விபத்தினை ஏற்படுத்தியது பாலாஜி தான் என்று தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாலாஜி, "தான் அந்த விபத்தை ஏற்படுத்தவில்லை, எனக்கும் அந்த விபத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பணம் சம்பாதிக்க எப்படிவேணாலும் செய்தியை பரப்புவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். நான் என்னுடைய KTM பைக் கூட 50, 60 கிலோமீட்டர் வேகத்தில் தான் ஓட்டுவேன் என்று கூறியுள்ளார்.