மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர்
இனியாவை விட முடியாமல் சிறையில் இருந்து வந்ததும் ரித்திஷ் பாக்கியாவின் ஹோட்டலுக்கு வருகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள இந்த சீரியலை ஆண்களும் அவதானித்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பாக்கியா, கணவரின் உதவி இல்லாமல் தனது கடமைகளை செய்து பிள்ளைகளை எப்படி பார்த்து கொள்கிறார் என்பதனை கருவாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.
இதற்கிடையில் இனியா அலுவலகத்துக்கு சென்றதும் அங்கு அவளுக்கு அசைமென்ட் ஒன்று கொடுக்கப்படுகிறது. அதில், போதைப்பொருள் பயன்படுத்தும் சிறுவர்கள் பற்றிய விவரங்களுடன் சில கட்டுரைகள் இனியா கையில் கொடுக்கிறார்கள்.
இதற்கான வேலைகளில் இனியா மும்முரமாக செய்து கொண்டிருக்கும் பொழுது அவருடைய நண்பர்கள் டீ குடிப்பதற்கா அழைக்கிறார்கள். அப்போது ஒரு குழப்பத்தில் இனியா அமர்ந்திருக்கிறார்.
அந்த சமயத்தில் நிதிஷ் பற்றிய உண்மைகள் தெரியவருகிறது. சுதாகர் தான் பல லட்சம் செலவு செய்து செய்தி வெளியில் வராமல் செய்து விட்டார் என்ற உண்மையையும் கூறுகிறார்கள்.
இனியாவுக்கு இதையெல்லாம் கேட்கும் பொழுது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கிறது. ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல இனியா ஆடிப்போய் இருக்கிறார். பாக்யாவுக்கு போன் பண்ணலாம் என யோசித்து விட்டு வேண்டாம் அப்பாக்கிட்ட சொல்லலாம் என போன் செய்கிறார். ஆனாலும் பிறந்த நாள் பார்ட்டி முடிந்தவுடன் அனைத்தையும் கோபியிடம் கூறி அழுகிறார்.
பதிலடிக் கொடுத்த இனியா
இந்த நிலையில், இனியாவின் பிறந்த நாள் முடிந்ததும், ரித்திஷ் ஒரு பிரபல ஹோட்டலில் போதைப் பொருள் பயன்படுத்திய காரணத்தினால் பொலிஸாரால் கைதுச் செய்யப்படுகிறார். அந்த சமயம், ஹோட்டல் விடயமாக வந்த பாக்கியாவிற்கு ரித்திஷ் பற்றிய உண்மைகள் அனைத்தும் தெரியவந்துள்ளன.
அதன் பின்னர், கோபியிடம் ரித்திஷ் கைதான விடயத்தை கூற வீட்டிலுள்ள அனைவருக்கும் போதைப் பொருள் பழக்கம் குறித்தும், ரித்திஷின் குடும்பத்தினர் பற்றியும் தெரியவந்துள்ளது. இதனால் இனியாவை பாக்கியா வீட்டிலேயே வைத்து கொண்டனர்.
சிறையில் வந்த ரித்திஷ் இனியாவை பார்ப்பதற்கான ஆபிஷிற்கு செல்கிறார். ஆனால் அங்குள்ளவர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை.
இதனை தொடர்ந்து பாக்கியாவின் ஹோட்டலுக்கு செல்லும் பொழுது அங்கு, ஆகாஷ் உடன் இனியா கதைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான கணவர் இனியாவை அடிப்பதற்காக கையை பிடித்து இழுக்கிறார். மகளை இப்படி பார்க்கும் பாக்கியா கடும் கோபத்தில் திட்டி அங்கிருந்து அனுப்புகிறார்.
இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட எழில் ரித்திஷ் வீட்டிற்கே சென்று அவரை அசிங்கப்படுத்தி விடுகிறார். இது தொடர்பில் பாக்கியாவின் குடும்பத்தினர் மீது சுதாகர் மனைவியை வைத்து புகார் கொடுத்துள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |