இளைஞரின் வயிற்றில் 63 ஸ்பூன்கள்.. திகைத்து நின்ற மருத்துவர்கள்! வெளியான அதிர்ச்சி காரணம்
உத்தர பிரதேசத்தில் போதைக்கு அடிமையாகிய நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 63 ஸ்டீன் ஸ்பூன் அகற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைக்கு அடிமையாகிய நபர்
உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள போபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவர் பல நாட்களாக போதைக்கு அடிமையாகி இருந்த இவரை குடும்பத்தினர் போதை மறுவாழ்வ மையம் ஒன்றில் அனுமதித்துள்ளனர்.
ஒரு மாத காலம் அங்கு இருந்த விஜய்யின் உடல்நிலை மிக மோசமான நிலையில், குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
அங்கு விஜய்யின் வயிற்றுக்குள் ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், இவரது வயிற்றில் 63 ஸ்பூன்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
வயிற்றில் இருந்த 63 ஸ்பூன்
இந்த இளைஞனின் வயிற்றில் எப்படி இதனை ஸ்பூன்கள் வந்தது என்று குழம்பினர். பிறகு மருத்துவர்கள் அந்த இளைஞனிடம் கேட்க, ஒரு வருடமாக ஸ்பூன் சாப்பிட்டு வருகிறேன்’ என்று கூற அதிர்ச்சி அடைந்தனர்.
2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் வெற்றிகரமாக 63 ஸ்பூன்களை அகற்றிவிட்டனர். உடல்நிலை மோசமாக இருப்பதால் தீவிர கண்காணிப்பில் அந்த இளைஞன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் குறித்த இளைஞரின் பெற்றோர்கள் போதை மறுவாழ்வ மைய ஊழியர்கள் தான் வலுக்கட்டாயமாக ஸ்பூனை சாப்பிட வைத்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளனர்.

