கொடிய விஷம் கொண்ட Gaboon Viper பாம்பை அசால்ட்டாக கையாலும் நபர்! பீதியை கிளப்பிம் காட்சி
நபரொருவர் கொடிய விஷத்தன்மை கொண்ட Gaboon Viper பாம்பை அசால்ட்டாக கையில் தூக்கி மாஸ் காட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
காபூன் வைப்பர் (பிடிஸ் கபோனிகா), காபூன் சேர்டர் என்றும் அழைக்கப்படுகிறது, இது, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் காணப்படும் மிகவும் கொடிய விஷமுள்ள ஆனால் பொதுவாக அடக்கமான தரையில் வாழும் பாம்பு இனமாக அறியப்படுகின்றது.

இது ஆப்பிரிக்காவின் மிக கனமான விஷ பாம்பு, 8 கிலோ (18 பவுண்டுகள்) எடை கொண்டது, மேலும் இது 2 மீட்டர் (சுமார் 7 அடி) நீளம் வரை வளரக்கூடியது.
காபூன் வைப்பர் எந்த பாம்பிலும் இல்லாத மிக நீளமான கோரைப் பற்களைக் கொண்டுள்ளது தான் இந்த பாம்பு இனத்தின் தனித்தன்மையாகும். இந்த வகை பாம்புகள் 4 செ.மீ (1.6 அங்குலம்) நீளம் கொண்டது.
தடிமனான உடல் செவ்வகங்கள் மற்றும் முக்கோணங்கள் பஃப், ஊதா மற்றும் பழுப்பு நிறங்களுடன் பார்ப்பவர்வர்களை பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும்.

அதன் மூச்சி காற்றே கேட்போரை பயமுறுத்தும் சத்தத்துடன் இருக்கும். இப்படி பார்க்கும் போதே பீதியை கிளப்பும் Gaboon Viper பாம்பை அசால்ட்டாக தூக்கி மாஸ் காட்டும் நபரின் அசாத்திய தைரியத்தை பறைசாற்றும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |