பரபரப்பான சூழலிலும் ஊனமுற்ற நாய்க்கு உதவிய நபர் - வைரலாகும் காணொளி
ஊனமுற்ற நாய் ஒன்றிற்கு ஒரு செய்த உதவிக்கு தற்போது பல இணையவாசிகள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை சொல்லும். தற்போது வைரலாகி வரும் காணொளியில் பரபரப்பான சாலையை கடக்க ஒரு ஊனமுற்ற நாய் காத்துக் கொண்டிருக்கும்

நேரத்தில் அதை ஒரு நபர் பார்த்து வாகனங்களை நிறுத்த கையை அசைத்து அந்த வாகனங்களை நிறுத்தி நாயை வரவழைத்து சாலையை மெதுவாக கடக்க உதவி செய்கிறார்.
நபரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அதிலும் பெரும்பாலான நெட்டிசன்கள் அந்த நபரை பாராட்டி வரும்நிலையில், சிலர் பயணிகளின் பொறுமையைப் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இந்த வீடியோவானது அந்த மனிதனின் கருணைச் செயலைத் தவிர, மற்ற பயணிகள் எவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |