மலைப்பாம்புக்கு கைகளில் தண்ணீர் ஊற்றி பருக கொடுத்த நபர்! மெய்சிலிர்க்கும் வைரல் காட்சி
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த பர்மிய மலைப்பாம்புக்கு கைகளில் தண்ணீர் ஊற்றி பருக கொடுக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பர்மிய மலைப்பாம்கள் கரிய மற்றும் பழுப்பு நிறமுடைய விஷமற்ற பாம்பினமாக அறியப்படுகின்றது.
இது உடலில் பழுப்பு நிற புள்ளிகளைக் கொண்டிருக்கும். காடுகளில் வாழும் பர்மிய மலைப்பாம்புகள் பொதுவாக 7 மீட்டர் நீளம் வரை வளரும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
பெண் பர்மிய மலைப்பாம்புகள், ஆண் பர்மிய மலைப்பாம்பைவிட சற்று நீளமாகவும், பருமனாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாம்பு விஷமற்றதாக இருக்கின்ற போதிலும், அதன் தோற்றமானது பார்ப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கும். ஆனால் பாம்பு வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் பலர் இந்த வகை மலைப்பாம்புகளை தான் அதிகமாக தெரிவு செய்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |