தலைநிறைய மல்லி பூ.... கொள்ளை அழகில் ரசிகர்களை ஈர்க்கும் தொகுப்பாளினி டிடி!
தொகுப்பாளினி டிடி அழகிய சேலையில் தலைநிறைய மல்லி பூ மற்றும் நெற்றியில் பொட்டுடன் தெய்வீகமாக போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தொகுப்பாளினி டிடி
தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. சிறு வயதிலிருந்தே சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தலை காட்டிய அவருக்கு ஆங்கர் ரோல்தான் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது.
காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தார். அந்த நிகழ்ச்சி டிடியின் அடையாளமாகவே மாறியது என்றால் மிகையாகாது.
சின்னத்திரையில் மட்டுமன்றி விசில் திரைப்படம் தொடங்கி பவர் பாண்டி, சர்வம் தாள மயம், காபி வித் காதல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளதுடன் சில திரைப்படங்களில் பின்னணி குரலும் கொடுத்து, வெள்ளித்திரையிலும் ஒரு ரவுண்டு வந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ஆனால் இவர்களுடைய திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது.விவாகரத்துக்கு பிறகு டிடி சிங்கிளாகவே இருந்துவருகிறார்.
சில மாதங்டகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை குறைத்துக்கொண்ட டிடி, தற்போது அதிலிருந்து மீண்டும் அதே உத்வேகத்துடன் நிகழ்சிகளில் பங்கேற்று வருகின்றார்.
இந்நிலையில் அழகிய பட்டு சேலையணித்து அம்மன் சிலை போல் காட்சியளிக்கும் தொகுப்பாளினி டிடியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.



