ராட்சத முதலைக்கு வெறும் கைகளால் உணவளித்த நபர்! இறுதியில் என்ன நடந்தது?
அமெரிக்காவை சேர்ந்த நபரொருவரர் ராட்சத முதலைக்கு துளியும் பயமின்றி தனது வெறும் கைகளால் உணவு கொடுக்கும் பதற வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தற்காலத்தில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வேட்டை விலங்குகளையும் கூட சில நாடுகளில் அனுமதி பெற்று வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர்.
இருப்பினும் சில தரப்பினர் விலங்குகளிடம் எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுருத்துகின்றனர். காரணம் அவை சில சமயங்களில் ஆவேசமாகி தாக்க முட்பட்டால்,அவற்றின் ஆக்ரோஷத்தை நம்மால் எளிதில் கட்டுப்படுத்த முடியாது.
இந்நிலையில் நபரொருவரர் ராட்சத முதலையின் அருகில் சென்று கொஞ்சமும் அச்சமின்றி வெறும் கைகளில் எந்தவிம பாதுகாப்பும் இன்றி உணவுகொடுத்துள்ளார்.
அதன் போது நபரின் கையில் இருந்த மீனை முதலை தாவி கடிக்க முட்பட்ட போது மீன் தவறி கீழே விழுந்துள்ளது. கீழே விழுந்த மீனை சாப்பிட்டு மீண்டும் தண்ணீருக்குள் சென்றது முதலை. இது பார்ப்பதற்கு மிகவும் பதறவைக்கும் காட்சியாக இருந்தது.
குறித்த காணொளி தற்போாது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பலரும் இது ஆபத்தானது என எச்சரித்து கமெண்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |