அன்று என்ன நடந்துச்சுனா.... முதன்முறையாக விளக்கமளித்த பாடகி கல்பனா
பாடகி கல்பனா ராகவேந்தர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ததாக செய்திகள் வெளியானதற்கு அவர் பத்திரிக்கையாளருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
பாடகி கல்பனா
சமீபத்தில் பாடகி கல்பனா தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்ததாக சில செய்திகள் வெளியாகின.
இதற்கு பாடகி கல்பனா சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
தற்போது யூடியூபில் தன்னை பற்றி தவறான செய்திகள் பல மொழிகளில் வெளிவருவதாக கூறியுள்ளார். இதனால் இத்தனை நாட்கள் அவர் சம்பாதித்த பேர் வீணாகி விட்டது என்று கூறியுள்ளார்.
“மீடியா இந்த விஷயத்த கையாண்ட விதம் ரொம்ப தப்பானது. முதல்ல நான் சொல்ல விரும்புறது என்னென்னா நான் எதற்கும் முயற்சி பண்ணல”.
எல்லோருக்கும் உடலில் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். நானும் ஒரு சாதாரண பெண் தான். எனக்கும் எல்லா பெண்களையும் போல் பொறுப்பு இருக்கு.
ஒரு பெண் மன நலம் உடல் நலம் இப்படி பல விடயங்களை கொண்டு தான் இந்த சமூகத்தில் வசிக்கிறாள்.
ஆனால் மற்றவர்களுக்கு அவரவர் வீட்டு பிரச்சனை எதுவும் தெரியாமல் கல்லெடுத்து அடிச்சிட்டு போறாங்க இதெல்லாம் நல்லா இருக்கா?
இப்படி தவறான வதந்தி பரப்புவதால் நல்ல செய்தி 10 பேருக்கு போகுது. அவதூறு செய்தி 1000 பேருக்கு போகுது. இப்படி ஒரு துர்பாக்கியமான சூழல்ல தான் நம்ப சமுதாயம் இருக்கு. நான் இங்கு வந்ததற்கு காரணம் உண்மைய சொல்றதற்கு தான்.
நான் அன்னைக்கு மயக்கமானதற்கு காரணம் நான் இந்த வயசுலயும் எல்எல்பி படிச்சிட்டு இருக்கேன். பிப்ரவரி மாசம் புல்லா எனக்கு எக்ஸாம் இருந்தது. அதுனால ரொம்ப ஸ்ட்ரெஸ்.
இந்த சமயத்துல எனக்கு ஜனவரி மாசத்துல இருந்தே உடம்பு சரியில்ல. நுரையீரல்ல தண்ணி புகுந்து ரொம்ப பிரச்சனை அனுபவிச்சிட்டு இருக்கேன். அப்படி இருந்தும் படிப்பு, பாட்டுன்னு எல்லாத்தையும் சமாளிச்சுட்டு வந்தேன்.
எல்லா சாதாரணமான பொன்னு மாதிரி எனக்கும் பொறுப்பு இருக்கு. இதனால தான் நான் மயங்கிடன். நீங்க எல்லாரும் சொல்றீங்க எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனைன்னு.
நான் சொல்றேன். என் வாழ்க்கையில நடந்த ரொம்ப பெரிய நல்ல விஷயம்ன்னா அது அவரு எனக்கு கணவரா கிடைச்சது தான். நான் செய்யுற இத்தனை வேலைக்கும் அவரு சப்போர்ட் பண்ணிட்டு இருக்காரு.
எந்த வீட்டுல அம்மா புள்ளைக்கு சண்ட இல்ல. டீனேஜ்ல இருக்க எல்லா வீட்டுலயும் சண்டை நடக்கும். ரெண்டு மூணு மாசமா தூக்கம் இல்லாம தவிக்குற எனக்கு 2 தூக்க மாத்திரை பத்தாது.
அது அதிக டோசேஜ் தான் கேக்கும். அப்படி இருக்கும் போது தான் இந்த பிரச்சனை வந்தது.செலிபிரிட்டியா இருக்குறதுனால என் மேலயும் என் குடும்பம் மேலயும் ஏன் சேத்த வாரி அடிக்குறீங்க.
எத்தனையோ பெண்கள் வன்கொடுமையால பாதிக்கப்படுறாங்க. அதபத்தி எல்லாம் பேசல. சினிமாவுல இருந்து வந்தா போதும் இஷ்டத்துக்கு பேசுறாங்க.
இதுல பாடகிக்கு உண்மையில் நடந்தது இதுதான்னு நியூஸ் போடுறீங்க. அவங்களுக்கு எப்படி தெரியும் அதுதான் உண்மைன்னு. எந்த வாயில இருந்து ஒரு விஷயம் வராம அது எப்படி உண்மையா இருக்கும்.
நான் 5 வயசுல இருந்து சினிமாவுல இருக்கேன். என்னோட போன் ஆன்ல தான் இருந்தது. யாராவது ஒருத்தர் போன் பண்ணி.
உங்களை பற்றி வெளியாகும் செய்திகள் உண்மையான்னு கேக்க வேண்டியது தானே. அது உங்களால முடியல. அவதூறு பரப்ப முடியுது. இப்படி பத்திரிக்கையாளருக்கும் வதந்தி பரப்பிய செய்தியாளர்களுக்கும் கல்பனா உண்மையை விளக்கியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |