22 தோசை சாப்பிடும் இளைஞர்... கோபிநாத்தையே ஏங்க வைத்த சம்பவம்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு மற்றும் தோசை சாதாரண உணவு என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்குகின்றார்.
இந்நிலையில் இந்தவாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரொமோ காட்சிகள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாரம் எடுத்துக் கொண்ட தலைப்பு தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு மற்றும் தோசை சாதாரண உணவு என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் வீட்டில் தோசையை விரும்பி சாப்பிடுபவர்களால், சக உறுப்பினர்கள் படும் அவஸ்தையை இளம்பெண் ஒருவர் கொட்டித் தீர்த்துள்ளார்.
அதிலும் நபர் ஒருவர் 22 தோசை சாப்பிடுவாராம். இதனால் அவரது தங்கை அரங்கத்தில் புலமபுகின்றார். ஆனால் அவரது அம்மாவோ அது ஒரு வரம் என்று கூறி அரங்கத்தை அதகளப்படுத்தியுள்ளார்.
இதெல்லாம் கேட்ட கோபிநாத் யார் சாமி அவன்... எனக்கே அவனை பார்க்கனும் போல இருக்கு... என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |