பிரிட்ஜை ஏசியாக மாற்றிய இளைஞன்....வைரலாகும் வீடியோ காட்சி...
கோடை வெப்ப காலத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பிறிட்ஜை ஏசியாக பயன்படுத்திய வீடியோ காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதற்காக உணவை விட பழங்கள் பானங்களை மக்கள் உண்டு உடலை தேர்த்தி வருகின்றனர்.
இந்த காலத்தில் வீடுகளுக்குள் வெப்பத்தை தணிப்பதற்காக ஏசி, ஏர் கூலர் உள்ளிட்டவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி கோடை வெப்பத்தை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை வீட்டில் இருப்பவர்கள் மேற்கொண்டுள்ள நிலையில் ஒருவர் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜை ஏசியாக பயன்படுத்தியுள்ளார்.
அதாவது ஃப்ரிட்ஜை திறந்து வைத்து அதற்கு முன்னால் ஏர்கூலரை வைத்து அந்த நபர் நிம்மதியாக உறங்குகிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பிறிட்ஜை ஏசியாகவும் மாற்றலாமா? என தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
How to use your refrigerator as air conditio pic.twitter.com/QAW8QWLWmx
— Eminent Woke (@WokePandemic) April 30, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |