மனித முகம் பிடிக்காமல் இளைஞர் செய்த வினோதம் - ஆச்சரியத்தை ஏற்படுத்திய தகவல்!
மனித முகம் பிடிக்காததால், இளைஞர் ஒருவர் தனது முகத்தை வினோதமாக மாற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண், பெண் என இருபாலரும் தங்களை அழகுபடுத்தி கொள்ள விரும்புவது வழக்கம். அதற்காக பலரும் அழகு நிலையங்களுக்கு செல்வது அல்லது வீட்டிலேயே எதாவது செய்து அழகுபடுத்திக்கொள்வது போன்றவற்றை செய்வார்கள்.
அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனிதரை போல தோற்றமளிக்க விரும்பாததால் பல லட்சம் செலவு செய்து தனது முகத்தை வினோதமாக மாற்றிய சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
28 வயதான அந்த இளைஞர் Black Depression எனும் பக்கத்தில் தனது வினோதமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். முகத்தில் jigsaw puzzle போன்ற வடிவத்தில் பல வண்ணங்களில் பச்சை குத்தியுள்ளார்.
மேலும், காது மற்றும் மூக்குகளில் துவாரங்களிட்டு அணிகலன் அணிந்துள்ளார். தனது பற்களுகளின் இரு வரிசைகளுக்கும் டைட்டானியத்தால் ஆன மேற்பூச்சை பூசி உள்ளார். இன்னும் ஒருபடி மேலே சென்று தனது இரு கண்களுக்கும் சாயம் பூசியுள்ளார், கண்களின் வெண்மை பகுதியில் கருப்பு நிற மைக்கொண்டு பச்சை குத்தப்பட்டுள்ளது.
இவரைக்கண்டு பலரும் ஆடிப்போயுள்ளனர். ஆனால், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "உடலில் மாற்றம் செய்வதில் எனக்கு நீண்ட நாட்களாக ஆர்வம் இருந்து வந்தது.
மற்றவர்கள் உடலில் செய்யும் மாற்றத்தை போல் அல்லாமல், நான் உடல் மாற்றத்தில் தனித்துவம் காட்ட விரும்பினேன். அதனால், நான் விரும்பியபடியே என்னால் என் உடலை மாற்ற இயலும், அதற்காக மற்றவர்கள் செய்வது போல நான் செய்ய விரும்பாமல், என்னை பார்த்து மற்றவர்கள் செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
மேலும், முதன் முதலாக நான் எனது நாக்கை பிளவு படுத்தும் செயல்முறையுடன் மாற்றத்தை தொடங்கினேன், இருப்பினும் இந்த உடல் மாற்றத்தில் நான் முழுமையாக திருப்தி அடையவில்லை.
எதிர்காலத்தில் நான் என் உடலில் மாற்றங்களை கொண்டுவர தொடர்ந்து முயற்சிப்பேன்" என தெரிவித்துள்ளார். இந்த வினோதமான தோற்றத்தை பெற இவர் இதுவரை ரூ .12 லட்சம் செலவு செய்து இருக்கிறார்.