65 வயதில் 19 வயது பெண்ணுடன் திருமணம் செய்த கோடீஸ்வரர்! 2 மாதத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்
19 வயது இளம்பெண் 65 வயதான கோடீஸ்வரர் ஒருவர் திருமணம் செய்து இரண்டும் மாதங்களில் அவர்கள் எடுத்துள்ள முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்தவர் ஹாஜி சொண்டனி (Haji Sondani) 65 வயதுடைய இவர் கடந்த மே மாதம் 18 ஆம் தேதியன்று, 19 வயதாகும் இளம் பெண் ஃபியா பர்லண்டி (Fia Barlanti) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம்
இவர்களின் வயது வித்தியாசம் அந்த சமயத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. அப்போது அன்பு மனைவிக்காக கணவர் ஹாஜி வீடு மற்றும் கார் ஒன்றையும் பரிசாக வழங்கி இருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தது.
திருமண செலவையும்,அவரே தான் ஏற்றுக்கொண்டார். இப்படி ஒரு நிலையில் ஹாஜி மற்றும் ஃபியா குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல், இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவாகரத்து
அதாவது இருவரும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் பிரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இருவருக்கும் ஒரு பிணைப்பு இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. அதே போல, மனைவி பிரிந்து சென்ற பின்னர், ஹாஜியின் உடல்நிலையும் சரி இல்லாமல் இருப்பதாக அவரது நண்பர் ஒரு கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இத்தகவல் வைரலான நிலையில் பலவிதமான கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.