8 ஆண்டுகளாக கணவன்- மனைவியாக வாழ்ந்த நண்பர்கள்! பெற்றோர்கள் முன்னிலையில் கோலாகல திருமணம்
இந்தியாவின் தெலுங்கானாவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக வசித்து வந்த நண்பர்கள் உறவினர்கள் புடை சூழ கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்படாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த வந்த நண்பர்கள் கடந்த 18ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
சுப்ரியோ சக்ரவர்த்தி மற்றும் அபய் டாங் இருவரும் எவ்வித திருமண சடங்குகளும் இன்றி தங்கள் உறவை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.
ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரியும் சுப்ரியோ சக்ரவர்த்தியும், அவரது கூட்டாளியான அபய் டாங், ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொருள் உருவாக்குநராகவும் பணிபுரிகிறார்.
கடந்த 2012ம் ஆண்டு டேட்டிங் ஆப் மூலம் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட, ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்டுள்ளனர், தொடர்ந்து சில இடையூறுகளுக்குப் பிறகு, தங்கள் குடும்பங்கள் ஒருவரையொருவர் ஜோடிகளாக ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கின்றனர்.
என்றாவது ஒருநாள் தாங்கள் அங்கீகரிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை காத்திருப்பதாகவும் கூறுகின்றனர் சக்ரவர்த்தி- அபய் டாங் ஜோடி.