தக்காளி இல்லாமல் 5 நிமிடத்தில் தயாராகும் ஆரோக்கியமான மல்லி சட்னி: எப்படி செய்யலாம்?
தக்காளி விற்கும் விலைக்கு இப்போது தக்காளி இல்லாமல் எதையாவது செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் உடனே உங்களுக்கு ஞாபகத்திற்கு வருவது இந்த மல்லி சட்னி தான்.
இந்த சட்னியில் ஆரோக்கியமான பொருட்களை சேர்ப்பதால் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சட்னிதான் இது.
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை - ஒரு கைபிடி
புதினா - ஒரு கை பிடி
கொத்தமல்லி - ஒரு கை பிடி
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 4 பல்
இஞ்சி - துண்டு
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய்
உளுந்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 மேசைக் கரண்டி
தேங்காய் துருவல்
செய்முறை
முதலில் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து பிறகு கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, புளி சேர்த்து நன்றாக வதத்திக் கொள்ளவும்.
எல்லாம் வதங்கியவுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுத்தால் ஆரோக்கியம் நிறைந்த மல்லி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |