தங்கம் விலையில் தக்காளி: அதற்கு பதிலாக இனி இதை ட்ரை பண்ணுங்க
கடந்த சில நாட்களாக எங்குப் பார்த்தாலும் அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி தான் தலைப்புச் செய்தியாக இருந்தது.
தக்காளியின் விலையை அதிகரித்து விட்டதால் தக்காளி இல்லாமல் சமையல் செய்து சாப்பிடுபவர்கள் ஏமாற்றத்துடன் தான் இருப்பார்கள்.
நாம் சமைக்கும் உணவுகளில் அருஞ்சுவையும் இருக்கவேண்டும் அப்போது தான் ஒரு முழுமையான உணவு உண்ட திருப்தி இருக்கும். அந்த சுவையில் புளிப்பு சுவையும் அடங்கும். இந்த சுவைக்காகத் உணவில் தக்காளி சேர்ப்பார்கள். ஆனால் தக்காளிக்குப் பதிலாக இனி இவற்றைப் பயன்படுத்தலாம்.
தக்காளிக்குப் பதிலாக
தக்காளிக்கு பதிலாக புளிப்பு சுவையை சேர்க்க புளியை பயன்படுத்தலாம். ரசம், சட்னி என்பன தயாரிக்கும் போது புளி சேர்த்து செய்யலாம்.
உணவின் புளிப்பு சுவையை அதிகரிக்க பச்சை மாங்காயை பயன்படுத்தலாம். இந்த பச்சை மாங்காயை சாம்பார், ரசம் என்பவற்றுக்கு பயன்படுத்தலாம்.
மகாராஷ்டிர உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் புளிப்பு சுவையைக் கொடுக்கும் கோகம் எனும் பழத்தை ஊறவைத்து பயன்படுத்தலாம்.
பச்சை மாங்காயைப் போல மாங்காய் பொடியை உணவுகளுக்கு பயன்படுத்தலாம். கோங்குரா எனும் ஆந்திர உணவுகளுக்கு அதிக புளிப்பு சுவைக்காக சேர்க்கப்படும்.
இதனை சிக்கன் மற்றும் மட்டன் கறிகளுக்கு பயன்படுத்தலாம். ராஜஸ்தான் மக்கள் தக்காளிக்கு பதிலாக கச்ரி எனும் காட்டு முலாம்பழத்தை பயன்படுத்துவார்கள். இதனை கறிகள் மற்றும் சட்னி தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
வைட்டமின் சி அதிகம் கொண்ட இந்திய நெல்லியானது ஊறுகாய் மற்றும் சட்னிக்களுக்கு தக்காளிக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |