சுவையான தர்ப்பூசணி மசாலா ஜூஸ் தயாரிப்பது எப்படி?
பொதுவாக நாம் கோடை காலங்களில் தர்ப்பூசணி சாப்பிடுவோம். இந்த பலம் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது.
தர்ப்பூசணி பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
அந்த வகையில் கோடைக்காலத்திற்கு அருந்தும் வகையில் ஒரு சுவையான தர்ப்பூசணி மசாலா ஜூஸ் எவ்வாறு தயாரிப்பது பற்றித் தெரிந்துக் கொள்வோம்.
தர்ப்பூசணி மசாலா ஜூஸ்
தேவையான பொருட்கள்
தர்ப்பூசணி – 1
இஞ்சி – 2 துண்டு
புதினா – சிறிதளவு
எலுமிச்சை பழம் – 1 (சாறு பிழியவும்)
பெருங்காயத் தூள் – சிறிதளவு மிளகு
தூள் – கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு – தேவையான அளவு
உப்பு – 1 டீஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் இஞ்சியையும், புதினாவையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு விழுதுப் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தர்ப்பூசணி பழத்தை எடுத்து அதிலுள்ள தசை பகுதியை மட்டும் தனியாக வெட்டி எடுத்து, அதனையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இதனையடுத்து இரண்டு கலவையும் ஒரு கப்களில் ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பரிமாறும் போது அந்த கலவையுடன் மிளகுத் தூள், பெருங்காயத் தூள், உப்பு, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து பரிமாறவும். தற்போது சுவையான தர்ப்பூசணி மசாலா ஜூஸ் தயார்.