கொரோனாவை அழிக்க மிளகு ரசம் சாப்பிடுவது பலன் அளிக்குமா? செய்வது எப்படி?
ரசத்தை உணவில் சேர்த்துகொள்வதால் பல நன்மைகள் உடலுக்கு அளிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.
மேலும், மிளகு ரசம் தொண்டைக்கு இதமாக இருக்கும். இது சளி, இருமலுக்கு உதவும் என்பதால் காய்ச்சல் சமயத்தில் மிளகு ரசம் தான் வைத்துக்கொடுப்பார்கள். இதை காய்ச்சல் சமயத்தில்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை.
தினசரி உணவில் ரசமும் சேர்த்துக்கொள்வது நல்லது. எனவே அருமையான மிளகு ரசம் எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புளி - நெல்லிக்காய் அளவு
- கருவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி தேவையான அளவு
அரைக்க
- பழுத்த தக்காளி - 1
- மஞ்சள் - 1/2 tsp
- பெருங்காயத்தூள் - 1/8 tsp
- மிளகு - 2 1/2 tsp
- சீரகம் - 1 tsp
- வெந்தயம் - 1/2 tsp
- பூண்டு - 3 பற்கள்
- உப்பு - 1 tsp
தாளிக்க
- எண்ணெய் - 2 tsp
- கடுகு - 1 tsp
- சீரகம் - 1/2 tsp
- காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
முதலில் புளியை அரை மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்துவிடுங்கள். பின் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு மைய அரையுங்கள்.
முதலில் மிளகு , சீரகம் சேர்த்து மைய அரைத்தபின் மற்ற பொருட்களை சேர்க்கவும். அடுத்ததாக ஊற வைத்த புளியை நன்கு கரைத்து அதன் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். அதன்பின்னர், கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்த்து கொஞ்சம் வாயில் வைத்து புளி, உப்பு அளவு தெரிந்த பின் அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ரசக் கலவை தயாரானதும் தாளிக்க கடாய் வைத்து கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.
தாளித்ததும் இந்த ரசக்கலவையை அதில் ஊற்றவும். பின் ரசம் நுரை பொங்கி வரும் வேளையில் அடுப்பை அணைத்துவிடுங்கள். இப்போது மிளகு ரசம் ரெடி!...