Paruththithurai Dosa: இலங்கை தமிழர்கள் அதிகம் விரும்பும் பருத்தித்துறை தோசை! எப்படி செய்வது?
தற்போது எவ்வளவு உணவு வகைவகையாக வந்தாலும் நமது பாரத்பரிய உணவு என்பது ஒரு சுவைதான். இந்த பாரம்பரிய உணவுகளை தினம் தினம் சாப்பிட நம் வீட்டிலேயே கற்றுக்கொள்ளலாம்.
பொதுவாக எல்லோரும் காலை உணவாக தோசை செய்து சாப்பிடுவோம். இதில் பல தானிய வகைகள் இருக்கின்றன. இந்த தானியங்கள் உடலுக்கு நன்மை தருகின்றது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செய்வார்கள் ஆனால் இந்த பதிவில் இலங்கை தமிழர்களுக்கு பிடித்த பருத்திதுறை தோசை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உழுந்து
- வெந்தயம்
- சோறு
- தேங்காய் துருவியது
- தண்ணீர் 2 கப்
- கேதுமை மா 6 கப்
- ஈஸ்ட் - கொஞ்சம்
- உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் உழுந்து மட்டும் வெந்தயத்தை கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதை நான்கு மணி நேரம் கழித்து சோறு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அவித்த கேதுமை மா அவிக்காத கோதுமை மா மூன்று மூன்று கப் சேர்த்து கலைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் உப்பு ஈஸ்ட் சேர்த்து உழுந்து கலவையையும் சேர்த்து 8 தணி நேரத் ஊற வைக்க வேண்டும். பின்னர் இதை தோசை போல சுட்டு எடுத்துக்கொள்ளலாம்.
உழுந்து உண்பதன் பயன்கள்
நோயுற்றவர்களின் தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும். இதை ஒரு உணவாக வாழ்வில் சேர்த்து வந்தால் எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது. எலும்பு,தசை முறிவு மற்றும் ரத்தக் கட்டிகள் குணமாக, உளுந்து சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உழுந்து சாப்பிட்டு வருதல் மிகவும் முக்கியமாகும்.செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் இவை உதவுகின்றன.
எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து நல்ல செரிமானத்தைப் பெறலாம்.இதில் மக்னீசியம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பிற சத்துக்கள் உள்ளன.இது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மெலிந்த உடல் உடையவர்கள் நன்கு வலுப்பெற, உடம்பில் இருக்கும் எலும்புகள், தசைகள், நரம்புகள் அத்தனையும் ஊட்டச்சத்து பெற்று நன்கு வளர இதை சாப்பிடலாம்.உடலில் இருக்கும் சூட்டினை தகர்த்து எறிய உடல் குளிர்ச்சி பெற உளுந்து உண்ண வேண்டும்.
இது தசை முறிவு போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு தீர்வை கொடுக்கும்.ரத்தக் கட்டிகள் கரைய உளுந்து நல்ல ஒரு அருமருந்தாக செயல்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |