pepper rice: மீந்து போன சாதத்தில் ஆரோக்கியம் நிறைந்த மிளகு சாதம்... எளிமையாக எப்படி செய்வது?
பொதுவாகவே தமிழர்களை பொருத்தவரையில் மதிய உணவுக்கு பெரும்பாலும் சாதம் செய்வது தான் வழக்கம். தமிழர்களின் உணவுபட்டியலில் சாதம் மிகவும் முக்கிய இடத்தை பெறுகின்றது.
அந்த வகையில் மதியம் செய்யும் சாதம் மீந்து போனால் பலரும் அதை தூக்கியெறிந்துவிடுவார்கள். ஆனால் மீதமாக சாதத்தை வைத்து அருமையான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மிளகு சாதம் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிளகில் ஆன்டிபாக்டீரியல் சக்தி அதிகளவில் இருக்கிறது. இதனால் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் மிளகு பெரிதும் துணைப்புரிகின்றது.
தினமும் உணவில் மிளகு சேர்த்து வந்தால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் சிறியவர்களுக்கு மிளகை உணவில் சேர்த்து கொடுப்பது மிகவும் சவாலான விடயம். அப்படியான நிலையில் மிளகு சாதம் நிறந்த தெரிவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் - 2 தே.கரண்டி
கடலைப்பருப்பு - ½ தே.கரண்டி
உளுந்து - ½ தே.கரண்டி
கருவேப்பிலை - ஒரு கொத்து
பெரிய வெங்காயம் - 2
வேக வைத்த சாதம் அல்லது மீதமான சாதம் - 1 கப்
மிளகு தூள் - 2 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
முந்திரி - 10
காய்ந்த திராட்சை - 15
நெய் - 1½ தே.கரண்டி
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் -சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - ½ தே.கரண்டி
செய்முறை
முதலில் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் ஆயியவற்றை போட்டு பெரியவிட வேண்டும்.
அதனையடுத்து பச்சை மிளகாய், கருவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுந்து, மற்றும் முந்திரி அகியவற்றை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் காய்ந்த திராட்சை, மற்றும் பெருங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிய பின்பு சாதத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு, இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் ஆரோக்கியமான மிளகு சாதம் தாயார.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |