மகாசிவராத்திரி ராசி பலன்கள்: அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் ராசிகள்.... பரிகாரம் என்ன?
இன்று மகாசிவராத்திரி வழிபடும் நிலையில் எந்த ராசிக்கு எந்த பரிகாரம் செய்தால் அதிர்ஷ்டத்துடன் கூடிய ஜாக்பாட் யாருக்கு என்பதையும் தெரிந்து கொள்வோம்.
இந்து சமயத்தில் சிவனை மகிழ்விக்க மகாசிவராத்திரி சிறந்த நாளாகும். இன்று மகா சிவராத்திரி என்பதால் இன்று செய்யப்படும் சிவ பூஜை பல மடங்கு பலனைக் கொடுக்குமாம்.
அந்த வகையில் எந்தெந்த ராசியினர் பரிகாரம் செய்து தனது அதிர்ஷ்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: மேஷ ராசியினர் இன்று தேன் நிவேதனம் செய்ய வேண்டும். சுத்தமான தேனாக இருக்க வேண்டும். கரும்பு சாறால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.
ரிஷபம்: பசுவின் காய்ச்சாத பாலைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதுடன், பாயாசம் நிவேதனம் செய்தால் தனலாபம் கிடைக்கும்.
மிதுனம்: மிதுன ராசியினர் சிவனுக்கு வில்வ பத்திரம் கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, ஏழைக்கு அன்னதானம் செய்தால் கஷ்டங்கள் தீருமாம்.
கடகம்: கடக ராசியினர் வெண்ணெய்யைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகமும், இனிப்பு நிவேதனம் செய்யவும். இதனால் மனஅழுத்தம் குறைந்து மன அமைதி கிடைக்கும்.
கன்னி: கன்னி ராசியினர் பால் அபிஷேகம் செய்து, கொய்யா, அன்னாசி போட்ட பச்சை நிற பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.
துலாம்: துலாம் ராசியினர் வெல்லம் மற்றும் கற்கண்டு சிவனுக்கு நிவேதனமாக செய்யவும். கோவிலுக்கு சர்க்கரை தானம் செய்தால், அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசியினர் குங்குமப்பூ கலந்த தண்ணீரால் அபிஷேகம் செய்து ஆப்பிள் பழத்தினை விவேதனம் செய்யவும். பிராமணருக்கு சிவப்பு துணி தானம் செய்தால், நன்மை உண்டாகும்.
தனுசு: தனுசு ராசியினர் கோபி சந்தனம் கலந்த தண்ணீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, குங்குமப்பூ கலந்த இனிப்பை நிவேதனம் செய்யதால் அனைத்து ஆசையும் நிறைவேறும்.

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள்
மகரம்: மகர ராசியினர் கருப்பு எள் கலந்த தண்ணீரால் சிவனுக்கு அபிஷேகமும், உலர் பழங்களை நிவேதனம் செய்தால் அனைத்து கஷ்டமும் தீருமாம்.
கும்பம்: கும்ப ராசியினர் நீல நிற பூக்களை சிவனுக்கு அர்ப்பணித்து, சாக்லேட் பர்பி இவற்றினை நிவேதனமாக கொடுக்கும். மேலும் ஏழைகளுக்கு தானம் செய்தால் சிவனின் அருள் கிடைக்குமாம்.
மீனம்: மீன ராசியினர் மஞ்சள் நிற பழங்களை சிவனுக்கு அர்பணித்து, பசித்தவர்களுக்கு உணவும், தட்சனையும் கொடுத்தால் அனைத்து ஆசையும் நிறைவேறும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |