Ayurveda: ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆயுர்வேத மருத்துவம்... சிகிச்சை முறைகள் என்ன?
பண்டைய காலம் முதல் இருந்துவரும் ஆயுர்வேத சிகிச்சை குறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆயுர்வேதம்
உடல் மற்றும் மனம் இரண்டில் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த ஆயுர்வேத மருத்துவ முறையாகும்.
பண்டைய காலம் முதலே இருந்து வரும் இந்த மருத்துவமானது, 5000 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைமுறையில் இருந்து வருகின்றது.
ஆயுர்வேதம் என்பது சமஸ்கிருத மொழி. இது வாழ்க்கையின் அறிவு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆயுர்வேதம் பொறுத்த வரை ஆரோக்கியம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலை என்று சொல்லலாம்.
ஆயுர்வேதம் நோய் தீர்க்குமா?
ஆயுர்வேத மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வு இருந்தாலே மக்கள் ஆயுர்வேத மருத்துவத்தை நாடி வருவார்கள் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள்.
அதாவது ஆயுர்வேதத்தின் குறிக்கோள் என்பது நோய்களை எதிர்த்து போராவது இல்லை. நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும்.
அதாவது நோய் வெளிப்படுத்துபவர்களுக் ஆரோக்கியத்தினை மீட்டெடுப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
ஆயுர்வேத மருத்துவ முறை தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளிலிருந்து வேறுபடுகிறது. இது அறிகுறிகளை காட்டிலும் நோயின் மூல காரணத்தை அறிந்து தீர்வளிக்க உதவுகிறது.
கொள்கைகள் என்ன?
ஆயுர்வேத மருத்துவம் என்பம் ஒவ்வொரு நபர்களின் உடல்வகையைக் கவனித்து அளிக்கப்படும் சிகிச்சை ஆகும். அதாவது ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமான குணநலன்களை கொண்ட உடல் வகையைப் பெற்றிருப்பார்கள்.
காற்று, நெருப்பு, நீர், பூமி மற்றும் ஆகாயம் என ஐந்து அடிப்படை கூறுகள் கொண்டதாக மனிதர்களின் உடல் முழுவதும் பிரபஞ்சத்தை ஒத்திருப்பதாக ஆயுர்வேதம் பார்க்கிறது.
இந்த அடிப்படை கூறுகளை கொண்டு மனிதர்களில் மூன்று தோஷங்கள் அல்லது ஆற்றல்களாக குறிக்கப்படுகின்றன. அவை வாதம், பித்தம், கபம் என்று கூறப்படுகின்றது.
இதில் எதாவது ஒரு தோஷங்கள் உடலில் இருக்க வேண்டிய அளவை விட அதிகமாக இருந்தால் நமது உடல் சமநிலையை இழக்கின்றது.
நமது உடல் ஆரோக்கியம் மற்றும் சீரான வாழ்க்கை முறை இந்த மூன்று திரிதோஷங்களின் சமநிலையை பொறுத்து அமையும்.
இதில் ஒரு தோஷத்தை நமது உடல் அதிகமாக கொண்டிருந்தால், வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பரிந்துரைக்கின்றது.
வாதம் பித்தம் கபம்
இதில் ஒன்று அல்லது இரண்டின் ஆதிக்கமே மனிதர்களின் உடல் செயல்பாடுகளைத் தீர்மானிக்கின்றது.
அதாவது இரண்டு நபர்களுக்கு நோயின் வெளிப்புற அறிகுறிகள் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவர்களின் ஆற்றல் அமைப்புகள் வித்தியாசமானதாகவே இருக்கும். அப்பொது சிகிச்சை முறைகளும் வேறுபடும்.
ஒருவருக்கு உடலில் இந்த தோஷ வகை அதிகமாக உள்ளது என்று தீர்மானிக்கப்பட்டாலும் தோஷங்களின் ஏற்ற இறக்கம் உடலில் மாறுகின்றன. தோஷ ஆதிக்கம் என்பது வயது, பகல், இரவு, பருவம் போன்றவற்றுடன் மாறுகிறது.
அக்னி என்பது நமது செரிமான மண்டலத்தை குறிக்கும். உள் மற்றும் வெளிப்புறங்களுக்கு இடையில் அக்னி உணவை உடல் திசு மற்றும் கழிவுகளாக மாற்றுகிறது. இது உணவில் இருக்கும் சத்துக்களை புரிந்து கழிவுகளை வெளியேற்றும் வரை உதவுகிறது.
உடலில் உட்புறம் மற்றும் வெளிப்புற அழுத்தங்கள் காரணமாக வெளிப்படும் நச்சுகளை உடல் ஜீரணிக்க ஆயுர்வேதம் படி அக்னி உடலை தூண்டுகிறது. இது உடல் மற்றும் மனநிலையின் உகந்த செயல்பாட்டை உறுதி செய்கிறது.
ஆயுர்வேதத்தின் அடிப்படை கோட்பாடு
மூன்று அடிப்படை ஆற்றல்கள் - ரஜஸ், சத்வா மற்றும் தாமஸ்
பஞ்ச மகா பூதங்கள் - ஆகாயம், வாயு, அக்னி, நீர் மற்றும் பூமி போன்றவை ஐந்து அடிப்படை கூறுகள் ஆகும்.
திரி தோஷங்கள்- என்பது உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவையாகும்.
சப்ததாதுஸ் - இது உடல் திசுக்களின் குறிப்பு ஆகும். ரச ( திரவம்) ரக்த (இரத்தம்) மாமிசம், மேதா -(கொழுப்பு) , அஸ்தி, சுக்கிலம்.
திரேயா தோஷா அக்னி - செரிமான தீக்களின் பதின்மூன்று வகைகள் ஜதாரக்னி ,சப்ததத்வாக்னி மற்றும் பஞ்சபுதக்கனி
திரிமாலாஸ் - மூன்று வகையான உடல் கழிவுகள் பூரிசா ( மலம்), முத்ரா (சிறுநீர்), மற்றும் ஸ்வேதா (வியர்வை)
ஆயுர்வேத சிகிச்சையின் எட்டு கிளைகள்
உள் மருத்துவம்
குழந்தை மருத்துவம்
உளவியல்
காது, மூக்கு, தொண்டை
அறுவை சிகிச்சை _ இன்று நடைமுறையில் இல்லை
முதியோர் மற்றும் புத்துணர்ச்சி
பாலுணர்வு சிகிச்சை மற்றும் கருவுறுதல் மற்றும் ஆலோசனை
முக்கியமான சிகிச்சை என்ன?
ஆயுர்வேதத்தின் மிக முக்கியமான சிகிச்சை பஞ்சகர்மா. இது உடலை சுத்திகரித்து சக்தியை அதிகரிக்க செய்யும் சிகிச்சை ஆகும். பயனுள்ள சிகிச்சையான உள் சுத்திகரிப்பு பணியில் ஐந்து படிகளை கொண்டது.
இவை ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தவும் செய்கின்றது. உடலில் நச்சுக்களை வெளியேற்றி உடலின் உள் அமைப்புகளுக்கு புத்துயிர் அளிக்கவும், நோய்களின் அமைப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கின்றது.
ஆயுர்வேதத்தில் நோயை அறிதலுக்கான முறைகள் மிகவும் எளிமையானதாகும். நோயை பற்றிய புரிதல் மனதுக்கும் உடலுக்கும் இடையிலான தொடர்புகளை பிரதிபலிப்பதுடன், நேர்மறையான ஆரோக்கியம் மற்றும் நோய் தடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
சுகாதாரத்தை மேம்படுத்துதல், ஆரோக்கியமான உணவு ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியமாகும். அதாவது ஆயுர்வேதம் என்பது இயற்கையின் இயற்கையின் சுற்றுச்சூழல் அமைப்புடன் பொருந்தி இருக்கும் மருத்துவம் ஆகும்.
தனிநபரின் ஆன்மாவை அமைதிபடுத்தும் வகையில் ஆயுர்வேத முக்கியத்துவம் அளிக்கிறது.
மருந்துகளின் தேர்வு மற்றும் அளவு தோஷம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளை பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |