நா சாகும் போது “இந்த” நடிகர் பக்கத்தில் இருக்கணும்: நடிகை வடிவுக்கரசியின் ஆசை- நிறைவேறுமா?
நடிகை வடிவுக்கரசியின் ஆசை குறித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை வடிவுக்கரசி.
இவர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.
ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சில திரைப்படங்களில் வில்லியாகவும் நடித்திருக்கிறார்.
அதிலும் குறிப்பாக “முதல் மரியாதை” திரைப்படத்தில் சிவாஜி கணேசனை பாடாய்படுத்தி இருப்பார். அந்த திரைப்பட காட்சிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.
நடிகை வடிவுக்கரசியின் ஆசை
இந்த நிலையில், சிவாஜி காலத்திலிருந்து தற்போது வரை உள்ள இளம் கதாநாயகர்களுடன் நடித்து வரும் வடிவுக்கரசி பேட்டியொன்றில் பகிர்ந்த விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது, “ என்னுடைய ஆசை என்னவென்றால் நான் சாகும் போது நடிகர் விஜய் சேதுபதி என்னுடைய பக்கத்தில் இருக்க வேண்டும் என்பது தான். மற்ற நடிகர்களிலும் பார்க்க, விஜய் சேதுபதியை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவர் எனக்கு புள்ள மாதிரி. அவருடைய கேரக்டர் அவ்வளவு அழகாகவும் யதார்த்தமாகவும் இருக்கும். மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பிறகு எனக்கு விஜயகாந்தை நினைவுபடுத்தும் நபர் என்றால் விஜய் சேதுபதி தான். நான் வீட்டில் இருக்கும் பொழுது அவருக்கு கோல் செய்து பேசுவேன்.
திடீரென்று பார்க்க வேண்டும் என்றால் விஜய் சேதுபதி இருக்கும் இடத்திற்கே போய் விடுவேன். ஒரு நாள் விஜய் சேதுபதி, நாம் இருவரும் ஒரு படம் சேர்ந்து நடிப்போம்..” என்றார். அதற்கு நான், “வேண்டாம்” என்றேன். ஏனென்றால் அவரை நான் தேடிப் போய் பார்ப்பதற்கு காரணம் வாய்ப்புக்காக தான்.. என்று யாரும் கூறினால் என்னால் தாங்க முடியாது...” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி ரசிகர்கள் பலரின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |