மகாலட்சுமி கேட்ட அந்த வார்த்தை... சிறையில் தற்கொலை செய்ய நினைத்த ரவீந்தர்
ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமி கேட்ட வார்த்தையையும், சிறையில் தான் பட்ட அவஸ்தையையும் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ரவீந்தர்
தயாரிப்பாளர் ரவீந்தர் கடந்த மாதம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கும் அவர் பல விடயங்களை கூறியுள்ளார்.
நடிகை மகாலட்சுமி சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு நெட்டிசன்களுக்கு அவ்வப்போது தீனி போட்டு வந்தார்.
தன்னை பலரும் உருவக்கேலி செய்துவந்தாலும், எந்தவொரு கவலையும் இல்லாமல் குறித்த தம்பிகள் மாறி மாறி அன்பை பரிமாறி புகைப்படம் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு ரவீந்தர் அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி 16 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
மனைவி கேட்ட கேள்விகள்
தற்போது ஜாமீனில் வெளியே வந்த அவர் சிறையில் பட்ட அவஸ்தையை கூறியுள்ளார். தனது மனைவி மகாலட்சுமி, நான் கைது செய்யப்பட்ட பொலிசாருடன் செல்லும் போது... என்னிடம் நீ எப்படி உட்காருவ.. எப்படி எழுந்திருக்கப் போற என்று கேட்டுள்ளாராம்.
ஏனெனில் மற்றவர்களை போன்று இவரால் சாதாரணமாக இந்த வேலைகளை செய்ய முடியாதாம். சிறைக்கு சென்றதும் தனது ஆடைகளை கழற்றி சோதனை செய்தார்கள்... அது ரண வேதனையையாக இருந்தது... தவறே செய்யாமல் ஜெயிலுக்கு சென்று வந்துள்ளேன்.
ஜெயிலில் இருந்த முதல் ஆறு நாட்கள் பாத்ரூம் கூட போக முடியாது... முட்டி போட்டுத்தான் பாத்ரூம் சென்றேன்... வேதனையின் உச்சத்தை அனுபவித்துவிட்டதுடன், செத்துவிடலாம் என்றும் பல முறை யோசித்ததாக கூறியுள்ளார்.
தன் மீது அவதூராக பழி போட்டவர்களை சும்ம விடமாட்டேன் என்று கூறி வருத்தப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |