பாண்டியன் ஸ்டோர்ஸ் 2... ப்ரொமோ வெளியிட்ட பிரபல ரிவி! தனமாக வந்தது யார் தெரியுமா?
பிரபல ரிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவு பெறவிருக்கும் நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரொமோவை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவிற்கு வர உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 5 வருடங்கள் வெற்றிகரமாக சென்றுள்ளது.
அண்ணன் தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட சீரியல் இல்லத்தரசிகளை அதிகமாகவே கவர்ந்திருந்தது.
இந்த சீரியலில் ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா ராஜ்குமார், வெங்கட், குமரன், லாவண்யா, விஜே தீபிகா, சரவண விக்ரம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரொமோவை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. இதில் மூர்த்தியாக ஸ்டாலின் முத்துவே நடித்துள்ளார்.
தனமாக நிரோஷா மற்றும் இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் என்று கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், நிரோஷா சுப்பிரபாதம் ஒலிக்க வந்து கொண்டிருக்கிறார்.
அப்போது மகன்கள் தூங்கிக்கொண்டிருக்க தீபாவளியும் அதுவுமா தூங்கிட்டு இருக்காதீங்கடா எழுந்திருங்க என்று சொல்ல, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறோம் என்று மகன்கள் கூறுகின்றனர்.
உடனே நிரோஷா அப்பா வருகிறார் என்று கூறியதுடன், அனைவரும் எழுந்து தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
பின்பு மூர்த்தி செய்தித்தாள் வாசிப்பது போன்று எண்ட்ரி ஆகியுள்ளார். தனம் எழுந்திருச்சிட்டாங்களா? என்று நிரோஷாவிடம் கேட்கின்றார்.
அவர் நம்ம புள்ளைங்க தானே சூப்பரா எழுந்திருச்சிட்டாங்க என்று கூற, இதற்கு மூர்த்தி புள்ளைங்களை வளர்த்தா என்னை மாதிரி வளக்கனும் என்று சொல்ல ப்ரமோ முடிவடைகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |