மாதம்பட்டி ரங்கராஜனின் ஸ்டைலில் ஆரோக்கியமான சின்ன வெங்காய சாதம் ரெசிபி இதோ
வெங்காயம் இல்லாத உணவை தமிழர்களின் உணவில் பார்க்க முடியாது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் மற்றும் கண்வலி குணமாகும். காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது.
இல்லங்களில் பார்க்கவே முடியாது. எந்த குழம்பு வகையாக இருந்தாலும் வெங்காயம் அவசியம். அதை சமைத்து சாப்பிடுவது தான் வழக்கம்.இவ்வளவு குண நலன்கள் கொண்ட வெங்காயத்தை வைத்து மாதம்பிட்டி ரங்கராஜனின் ஸ்டைலில் சின்ன வெங்காய சாதம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 25 சின்ன வெங்காயம்
- 1 ½ ஸ்பூன் மல்லி
- 2 ஸ்பூன் நெய்
- அரை கப் தேங்காய் துருவல்
- 6 வத்தல் மிளகாய்
- அவித்த அரிசி 1 ½ கப்
- உப்பு 1 ஸ்பூன்
- சீரகம் 4 ஸ்பூன்
- எண்ணெய்
செய்யும் முறை
முதலில் சின்ன வெங்காயத்தை இரண்டு இரண்டாக நறுக்கி தனியே எடுத்து வைகக்க வேண்டும். இதன் பின்னர் மல்லியை தனியாக எடுத்து வறுக்க வேண்டும். இதனை அரைத்து பொடியாக எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய் சேர்த்து சீரகம், வத்தல், வெங்காயம், தேங்காய் சேர்த்து வறுக்கவும். இது நன்றாக வறுபட்டு வந்ததும் அவித்த சாதத்தை கொட்டி மல்லிப்பொடி உப்பு சேர்த்து நன்றாக கிளர வேண்டும்.
இதன் பின்னர் நமக்கு ஏற்ற வகையில் இதை பரிமாறிக்கொள்ளலாம். வெங்காயம் சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் தியோசல்பினேட்டுகள் ரத்தத்தின் சீரான தன்மையை சரியாக வைத்திருக்க உதவுகிறது.
இதன் காரணமாக, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பல மடங்குகளால் குறைகிறது. இதய ரத்த நாளங்களில் ரத்தம் உறைவு ஏற்படுவதால் நெஞ்சு வலி ஏற்படும். பக்கவாதம் கூட அதனால் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த பிரச்சனைக்கு சின்ன வெங்காயம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |