தன் குழந்தை என ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்! படுவைரலாகும் பதிவு
மாதம்பட்டி ரங்கராஜ் ஆடைவடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தன் குழந்தை என ஒப்புக்கொண்டதாகவும், ஒரு தந்தையாக தனது கடமைகளையும் பொறுப்புகளையும் வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டு அவரே வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மாதம்பட்டி ரங்கராஜ்
சர்ச்சை பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் பிரபல சமையல் கலைஞராக வலம் வரும் இவரின் சமையக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பெரிதும் வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார்.இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
கடந்த 2023ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், தான் கர்ப்பமாக இருந்தபோது மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைவிட்டு விலகியதாகவும் ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார்.இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடைபெற்று வந்தது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில், தனது மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த 6 மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மகனின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் தொடர்ந்து முழு பொறுப்புடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், மகனின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. குறித்த பதிவு தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |